-0.7 C
New York
Sunday, December 28, 2025

மடு அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட முத்திரை வெளியீடு.

மன்னார்-  மடு அன்னையின் ஆடித் திருவிழா இன்று கொண்டாடப்படவுள்ளது.

இந்த நிலையில், மடு அன்னை  முடிசூட்டப்பட்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட முத்திரை நேற்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை அன்ரனி ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஏற்பாட்டில் நேற்று முற்பகல் இந்த நிகழ்வு நடைபெற்றது.

தபால்மா அதிபர் ருவன் சத்குமாரவினால் விசேட முத்திரை மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் வழங்கி வைக்கப்பட்டது.

Related Articles

Latest Articles