லுசேர்னில், சந்தேக நபர் ஒருவரை பொலிசார் மறித்து விசாரிக்க முயன்ற போது, ஆற்றில் குதித்து தப்பியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், லூசெர்ன் பொலிசார் ரோந்துப் பணியின் ஈடுபட்டிருந்த போது, ஒரு நபரை தடுத்து நிறுத்தினர்.
சந்தேக நபரின் அசாதாரண நடத்தை காரணமாக அவரை சோதனை முற்பட்ட போது, அவர் தப்பியோடி ஆற்றில் குதித்து மாயமானார்.
அவர் ஒரு போதைப்பொருள் கடத்தல்காரர் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து, மீட்பு ஹெலிகொப்டர்கள், படகுகள் மற்றும் மீட்பு சேவை 144 மூலம் லுசேர்ன் பொலிசார் உடனடியாக தேடுதல் பணியை முன்னெடுத்தனர்.
பல மணிநேரம்தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதும், காணாமல் போன நபர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று லுசேர்ன் சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆங்கிலம் மூலம். – 20min