சாஸ் கோன்டில் (Saas-Grund) புயல் மற்றும் மழை வெள்ளத்தினால், 1 இலட்சம் கனமீற்றர் அளவுக்கு கழிவுகள், சிதைவுகள் சேர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதைவுகள், மற்றும் சேறு என்பன நிரம்பியுள்ள இந்தப் பகுதியில் துப்புரவு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இன்னும் பல வீடுகளின் முன் இடிபாடுகள் மற்றும் சேதமடைந்த கார்கள் உள்ளன.
இந்தப் பகுதியை விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டு வர குடியிருப்பாளர்கள் மற்றும் அவசர சேவை பணியாளர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.
வீதிகளில் காணப்பட்ட சேறு, சகதி மற்றும் மண் போன்றன அகற்றப்பட்டுள்ளன.
மலைபோலக குவிந்து கிடக்கும் இந்தக் கழிவுகளை முற்றாக அகற்றுவதற்கு பல வாரங்கள் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மூலம். – 20min