டிசினோவில் கடந்த சனிக்கிழமை கடும் புயலுடன் கூடிய கடும் மழை பெய்ததை தொடர்ந்து ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால், மேலும் நான்கு பேரைக் காணவில்லை என்று கன்டோனல் பொலிசார் நேற்று அறிவித்துள்ளனர்.
பிராட்டோ சோர்னிகோ மற்றும் போண்டானாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களே காணாமல் போயிருப்பதாகவும், அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிசார் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, டிசினோவில் ஐந்து பேர் மற்றும் வலஸில் ஒருவர் என காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் இதுவரை வெற்றிபெறவில்லை என்று பொலிசார் நேற்று தெரிவித்தனர்.
அதேவேளை சனிக்கிழமை வீசிய புயல் மற்றும் மழையைத் தொடர்ந்து பல இடங்களில் மின்சாரம் மற்றும் அலைபேசி சேவைகள் முடங்கியிருந்தன.
தற்போது அந்த சேவைகள் மீளமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் மூலம். – 20min