16.6 C
New York
Thursday, September 11, 2025

பாலியல் வல்லுறவு குறித்த சட்டத்தில் திருத்தம் – நடைமுறைக்கு வந்தது புதிய குற்றங்கள்.

சுவிசில் பாலியல் வல்லுறவுக் குற்றம் தொடர்பான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, முன்னதாக பாதிக்கப்பட்டவரை,  குற்றவாளி அச்சுறுத்தியிருந்தால் அல்லது வன்முறையை பிரயோகித்திருந்தால் மட்டுமே, அது பாலியல் வல்லுறவாக அல்லது பாலியல் தாக்குதலாக கருதப்பட்டது.ஆனால் இனிமேல், அது பொருந்தாது.

தற்போது, பாதிக்கப்பட்டவரின் விருப்பத்திற்கு எதிரான உடலுறவு மட்டுமல்ல, உடல் ஊடுருவலை உள்ளடக்கிய உடலுறவு போன்ற செயல்களும் பாலியல் வல்லுறவு குற்றத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இது குறிப்பிட்டளவுக்கு அதிகமான பாலியல் செயற்பாடுகளை பாலியல் வல்லுறவாக கருதும் என்று சமஷ்டி பேரவை தெரிவித்துள்ளது.

அத்துடன், திருட்டுத்தனம் (stealthing) என்று அழைக்கப்படுவதும் தண்டனைக்குரிய குற்றமாக நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த குற்றம் சம்மதமான உடலுறவின் போது நிகழ்கிறது.

ஆனால்,  ஒரு நபர் இரகசியமாக மற்றும் மற்றொரு நபரின் முன் அனுமதியின்றி, ஆணுறையை அகற்றும் போது அல்லது தொடக்கத்தில் இருந்து அதனைப் பயன்படுத்தவில்லை என்றால் குற்றமாக கருதப்படும்.

மேலும், ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் புதிய கற்றல் திட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

திருத்தப்பட்ட பாலியல் குற்றவியல் சட்டத்தை சுவிஸ் நாடாளுமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம்  நிறைவேற்றியது.

பாலியல் செயல்கள் சம்பந்தப்பட்டவர்களின் வெளிப்படையான ஒப்புதலுடன் மட்டுமே நடந்திருக்க வேண்டும்.

ஆங்கிலம் மூலம். – swissinfo

Related Articles

Latest Articles