நேற்று முன்தினம் இரவு காலமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று காலை 9 மணி முதல் கொழும்பு ரேமன்ட் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது முன்னாள் ஜனாதிபதிகள், மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சிகளின் தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நாளை பிற்பகல் நாடாளுமன்றத்தில் இரா.சம்பந்தனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும். இதன் பின்னர் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.
வரும் ஞாயிறன்று இறுதிச் சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.