இலங்கையில் லங்கா ஐஓசி நிறுவனம், ஒக்டேன் 100 பெட்ரோல் விற்பனையை இன்று ஆரம்பித்துள்ளது.
XP100 என அழைக்கப்படும், இந்த பெட்ரோலின் உத்தியோகபூர்வ அறிமுகம் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு கொழும்பில் நடைபெற்றது.
இதன் மூலம் உலகில் இவ்வகை பெட்ரோலை விற்பனை செய்யும் எட்டாவது நாடாக இலங்கை மாறியுள்ளது.
நவீன வாகனங்களில் பயன்படுத்துவதற்கு உகந்த இவ்வகை எரிபொருளின் மூலம் அதிகளவு தூரத்துக்கு சீரான ஓட்டம் மற்றும் அதிக இயந்திர செயல்திறனை அனுபவிக்க முடியும் என லங்கா ஐஓசி நிறுவனம் கூறுகிறது.
இலங்கையில், இந்த வகை பெட்ரோல் ஒரு லீட்டர் 793 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.