0.8 C
New York
Monday, December 29, 2025

சியர் நகரத்தில் வீடுகளுக்குத் திரும்ப முடியாதுள்ள 141 பேர்.

சுவிட்சர்லாந்தின்  வாலய்ஸ் கன்டோனில் உள்ள, சியர் நகரத்தில் அண்மையில் வீசிய புயலை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால், 141 பேர் இன்னமும் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

இவர்கள் வசித்த சில கட்டடங்கள் மக்கள்  வசிக்கத் தகுதியற்றவையாக உள்ளன.

இதனால் 141 பேர் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று நகர மேயர் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டடங்கள் 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை, செங்கற்கள் மற்றும் சாந்துகளால் ஆன அடித்தளங்களைக் கொண்டவை என்பதால் இந்த வீடுகளுக்குத் திரும்புவது ஆபத்தானது என்று சியர் நகர மேயர் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நகராட்சி ஒரு ஆதரவு வலையமைப்பை உருவாக்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம் -Swissinfo

Related Articles

Latest Articles