26.7 C
New York
Thursday, September 11, 2025

சூரிச் அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண்ணின் சடலம்- கொலை என சந்தேகம்.

சுர்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவரின் சடலத்தை, சனிக்கிழமை அதிகாலை ஐந்து மணியளவில்  லூசெர்ன் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

சூரிச் பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவக் கழகம் சடலத்தை பரிசோதித்து வருகிறது.

இது ஒரு கொலை என்று அதிகாரிகள் கருதுவதாக லூசெர்ன் சட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இறந்தவரின் கணவன் சம்பவ இடத்தில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நிரபராதி என்று கருதப்படுகிறது.

கொலை தொடர்பாக தகவல் அளிக்கக் கூடிய நபர்களை தேடி வருவதாக லூசெர்ன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles