26.5 C
New York
Thursday, September 11, 2025

புத்தரின் தலைக்குள் கெட்டமைன் போதைப்பொருள்.

பெர்லினில் இருந்து பாசல் செல்லும் ரயிலில்  எல்லை சோதனையின் போது போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

புத்தரின் உருவத்துக்குள் அவர் 13 கிலோ கிராம் கெட்டமைன் மற்றும் ஒரு கிலோ கிராம் எம்.டி.எம்.ஏ போதைப் பொருட்களைக் கடத்தி வந்த போதே சிக்கியுள்ளார்.

புத்தர் தலையை சோதனையிட்ட போது, ​​அதற்குள் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி இவர், ஜெர்மன்-சுவிஸ் கூட்டு செயலணி சேவைக் குழுவிடம் சிக்கியதாக சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புக்கான சமஷ்டி அலுவலகம் நேற்று அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் மற்றும் போதைப்பொருட்கள் பாசல்-ஸ்டாட் கன்டோனல் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தந்திரோபாய விசாரணை காரணங்களுக்காக, இந்த தகவல் ஊடகங்களுக்கு தெரிவிக்க முன்னர் காத்திருக்க முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – The swiss times

Related Articles

Latest Articles