23.4 C
New York
Sunday, July 20, 2025

ரஷ்ய உளவாளிகளைத் தேடும் சுவிஸ் பொலிஸ்.

ஆயுதங்கள் மற்றும் பிற ஆபத்தான பொருட்களை வாங்க முயற்சித்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து,  ரஷ்ய இராஜதந்திரி, சந்தேகத்திற்குரிய முகவர் மற்றும் இரண்டு சந்தேக நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக சுவிஸ் சட்டமா அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இராஜதந்திர விலக்கு இல்லாத இரு குற்றவாளிகளுக்கு எதிராகவும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

அவர்கள் சுவிட்சர்லாந்தில் போர் பொருள் சட்டத்தை மீறியதாக சந்தேகிக்கப்படுகிறது.

மூன்றாவது நபரை விசாரிக்க சட்டமா அதிபர் அலுவலகத்தின்  கோரிக்கைக்கு பெடரல் நீதிமன்றும் பொலிஸ் பணியகம், ஒப்புதல் அளித்துள்ளதுடன். தேசிய பிடியாணை  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் பேர்னில் இராஜதந்திரியாக பணியாற்றியதாகவும், இரகசிய சேவையால் கண்காணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான பொருட்களைப் பெறும் நோக்கில் உளவு பார்த்ததாக அவர் குற்றம்சாட்டப்பட்ட பின்னர், அவர் சுவிட்சர்லாந்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அந்த நபரின் இராஜதந்திர பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

அவர் நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், ​​பல வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட பின்னர், குற்றவியல் வழக்குக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் சட்டமா அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மூலம் – 20min

Related Articles

Latest Articles