16.3 C
New York
Friday, September 12, 2025

சுவிஸ் அரசியல்வாதிகள் மீதான அச்சுறுத்தல்கள் குறைந்தன.

சுவிஸ் அரசியல்வாதிகள் மீதான உடல்ரீதியான தாக்குதல்கள் அரிதானவையாக இருந்தாலும், அண்மைய ஆண்டுகளில் அத்தகைய அச்சுறுத்தல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக, Fedpol எனப்படும் சமஷ்டி பொலிஸ் பணியகம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு அச்சுறுத்தலை பதிவு செய்ததாக  Fedpol  கூறியுள்ளது.

இதுதொடர்பாக, 2023 இல், Fedpol 290 அறிக்கைகளைப் பெற்றதாகவும், 2022 இல்,இந்த எண்ணிக்கை 238 ஆக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் உச்சத்தில், அரசியல்வாதிகள் மீதான கோபம் அதிகரித்த போது, ​​​​1,215 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இருப்பினும், அச்சுறுத்தல்களின் தன்மை அண்மையில் கவலையளிப்பதாக உள்ளது என்றும், அச்சுறுத்தல்களின் தொனி மோசமானதாக உள்ளது என்றும். Fedpol இன் 2023ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலம் – Swissinfo

Related Articles

Latest Articles