16.1 C
New York
Friday, September 12, 2025

மதுபோதையில் இருந்தவரின் தாக்குதலில் காவலாளி காயம்.

Tösstal இல் உள்ள  Rikon இல் நடந்த ஒரு நிகழ்வில், மதுபோதையில் சென்றவருக்கும், காவலாளிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்  வன்முறையில் முடிந்திருக்கிறது.

நேற்று அதிகாலை 3:30 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மதுபோதையில் இருந்த 22 வயதான சுவிஸ் நபர் திருவிழா பகுதியை விட்டு வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களை ஏற்கவில்லை.

 அவர் பாதுகாப்புடன் வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது, ​​​​அந்த நபர் ஒரு பாதுகாவலரைத் தாக்கி கீழே தள்ளி விழுத்தினார்.

 கீழே விழுந்ததில் 31 வயதுடைய அந்த பாதுகாவலருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து சூரிச் கன்டோனல் பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் அலுவலகம் என்பன விசாரித்து வருகின்றன.

சந்தேகத்திற்குரிய குற்றவாளி நேற்றுக் காலை துர்கோ கன்டோனில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டு, அவரது இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலம் –zueritoday

Related Articles

Latest Articles