2 C
New York
Monday, December 29, 2025

மீண்டும் புயலுடன் ஆலங்கட்டி மழை- பேர்ணுக்கு கடும் எச்சரிக்கை.

சுவிற்சர்லாந்தின் பல பகுதிகளில் நேற்று முதல் மீண்டும் புயலுடன் கூடிய வானிலை காணப்படுகிறது.

பேர்ணில் இருந்து சூரிச் நோக்கி நகரும், புயலினால் கடும் காற்று, மழை, ஆலங்கட்டி மழை, மின்னல் , வெள்ளம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்று வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேர்ண் நகருக்கு இரண்டாவது பெரிய வானிலை எச்சரிக்கையான 4 ஆவது நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை Spiez இல் புயல் வீசிய போல பல சென்டிமீற்றர்கள் விட்டமுள்ள ஆலங்கட்டி மழை கொட்டியது.

Seftigen நகர சபையில் கடும் மழையினால் வீதிகளில் வெள்ளம் காணப்படுகிறது.

புயல் மற்றும் மழையினால், Basel SBB – Strasbourg (F) இடையிலான ரயில் போக்குவரத்து நேற்றிரவு 3 மணிநேரம் தடைப்பட்டது.

முன்னெச்சரிக்கையாக ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று அதிகாலை மீண்டும் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles