0.8 C
New York
Monday, December 29, 2025

சூரிச்சில் இரண்டு ட்ராம்களுக்கு இடையே நசிந்த கார்.

சூரிச்சின்  Limmatplatz இல், லைன் 17 இல் இன்று பிற்பகல் இரண்டு டிராம்களுக்கு இடையில் ஒரு கார் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தினால் டிராம்களில் ஒன்று தடம் புரண்டது.

முதற்கட்ட தகவலின்படி, தீயணைப்புத் துறையினர் சாரதியைக்  காரில் இருந்து விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்

​​விபத்து நடந்ததை உறுதி செய்த சூரிச் நகர பொலிஸ் பேச்சாளர், இதுவரை யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்டார்.

இந்த விபத்து காரணமாக பொது போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

டிராம் பாதைகள் 4, 13 மற்றும் 17 ஆகியவை Bahnhofquai/HB மற்றும் Escher-Wyss-Platz இடையே தடைப்பட்டுள்ளன.

Bucheggplatz மற்றும் Kalkbreite/Bhf இடையேயான பேருந்து பாதை 32இலும் தடை ஏற்பட்டது.

பிற்பகல் 3 மணியளவில் இந்த தடைகளை நீக்கப்பட்டுள்ளன.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles