பாரம் தூக்கி (forklift) வாகனம் மோதிய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Steffisburg BE இல் உள்ள Töpferweg கழிவகற்றல் மையத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பேர்ண் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் 75 வயதுடைய முதியவர் ஒருவர் காயமடைந்து மரணமாகியுள்ளார் என்றும் அவர் சுவிஸ் நாட்டவர் என்றும் பேர்ண்னை வதிவிடமாக கொண்டவர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மூலம் -20 min

