21.6 C
New York
Wednesday, September 10, 2025

அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்- பெண் பலி, இருவர் காயம்.

Rueun GR இல் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஒரு ட்ரக், ஒரு வான் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் அடுத்தடுத்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இந்தச் சம்பவத்தில் வானில் பயணம் செய்த பெண் உயிரிழந்தார். அவரது 14 வயதுடைய மகள் படுகாயம் அடைந்தார்.

மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 56 வயதுடைய பெண்னும் காயமடைந்துள்ளார்.

Graubünden  பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூலம் -20min

Related Articles

Latest Articles