-0.1 C
New York
Sunday, December 28, 2025

14 கிலோ மீட்டர் நீளத்துக்கு காத்திருந்த வாகனங்கள்.

Gotthard நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கிய பகுதியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் நேற்று பிற்பகல் 14 கிலோமீட்டர் நீளத்துக்கு வாகனங்கள் காத்திருக்கும் நிலை காணப்பட்டது.

வடக்கு திசையில் பயணம் செய்த வாகனம் ஒன்று பழுதடைந்ததால், சுரங்கப்பாதையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அந்த வாகனம் அகற்றப்பட்ட பின்னரே ஓரளவுக்கு நிலைமை சுமுகமாகியது.

எனினும் தெற்கு நோக்கிய பாதையில், இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் –  The swiss times

Related Articles

Latest Articles