Schwyz கன்டோனில் Einsiedeln இல் உள்ள Schwanenstrasse இல் குடியிருப்பு மற்றும் வர்த்தக கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து அந்தக் கட்டடத்தில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு வேறு இடங்களில் இரவைக் கழிக்க நேரிட்டது.
- Advertisement -

கூரை வழியாக கடும் புகை வெளிவந்து கொண்டிருந்த நிலையில், தீயணைப்புப் பிரிவினர் விரைந்து சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிபத்துக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.
மூலம் – Zueritoday


