சூரிச் விமான நிலையத்தில், ஒரு பாரிய உணவு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது.
1ஆம் மற்றும் 2ஆம் இலக்க தரிப்பிடங்களுக்கு நடுவே இந்தக் கட்டுமானப்பணி இடம்பெறுகிறது.
இந்த புதிய உணவு அரங்கத்தை விமான நிலைய வணிகப் பகுதி, 1 மற்றும் 2ஆம் இலக்க முனையங்கள், தரிப்பிடம் 2 மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து அடைய முடியும்.
சுமார் 15 வெவ்வேறு உணவு நிலையங்கள், மற்றும் உணவு டிரக்குகள் இங்கு உணவுப் பொருட்களை விற்பதற்கேற்ற வகையில் இந்த அரங்கம் அமைக்கப்படுகிறது.
உணவு அரங்கம், பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே இது மிகவும் பிரபலமானதாக இருக்கும்.
250 மில்லியன் பிராங் செலவில் அமைக்கப்படும், உணவு அரங்கத்தின் கட்டுமானப் பணிகள் 2026 இல் முடிக்கத் திட்டமிடப்பட்டது, ஆனால் அது 2027 ஆம் ஆண்டிலேயே திறக்கப்படும்.
மூலம் – 20min