17.5 C
New York
Wednesday, September 10, 2025

ஒஸ்டர்முண்டிஜென் மேயர் போட்டியின்றி தேர்வு.

Ostermundigen நகரின் மேயராக தோமஸ் இட்டன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் மேலும் ஒரு பதவிக் காலத்திற்கு மேயராக இருப்பார் என, நகரசபை இன்று அறிவித்துள்ளது.

Ostermundigen நகர மேயர் பதவிக்கு போட்டியிட சுயேட்சையான தோமஸ் இட்டன் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதனால் அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகரசபையின் அடுத்த பதவிக்காலம் 2025 முதல் 2028 வரை இருக்கும்.

2013 ஆம் ஆண்டு முதல் இடென் Ostermundigen நகர மேயராக இருந்து வருகிறார்.

அவர் முன்னர் SP கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்.- bluewin

Related Articles

Latest Articles