2 C
New York
Monday, December 29, 2025

சுவிஸ் மொடல் அழகி தாய்லாந்தில் கொலை.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 24 வயதான மொடல் அழகி Gwendoline Cretton பாங்கொக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை மாலை 6.15 மணியளவில்இடம்பெற்றதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர், இத்தாலிய பஷன் பிராண்டிற்கான விளம்பரப் பிரச்சாரத்தில் பணியாற்றினார். முன்னர் அவர் ஹாங்கொங்கில் பணிபுரிந்தார்.

சுவிஸ் கடவுச்சீட்டைக் கொண்ட, கொலை செய்யப்பட்ட மொடல் அழகி, அவரது காதலனால், குத்திக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுவிஸ் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவர், தனது காதலி தற்கொலை செய்ய முயன்றதாக கூறி, கொலையை மறைக்க முயன்றுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் பொலிசார்  அவரை கைது செய்தனர் என்று தாய்லாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மூலம் – 20min

Related Articles

Latest Articles