16.6 C
New York
Thursday, September 11, 2025

ஜனாதிபதி தேர்தல் வர்த்தமானி நாளை வெளியீடு.

ஜனாதிபதி தேர்தல் குறித்த அதிகாரபூர்வ வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் முக்கிய கூட்டம் இன்று காலை இடம் பெற்றது.

இதனை அடுத்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர் எம் ஏ எல் ரத்னநாயக்க, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,  1981 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின், சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய,  ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பிரகடனத்தை வெளியிடும் திகதியும்,  பெயர் குறித்த நியமனங்களை ஏற்கும் திகதியும், குறித்து அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை,  ஜூலை 26 ஆம் திகதி வெளியிடுவதற்கு இன்றைய தினம் கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles