8.3 C
New York
Sunday, March 29, 2026

சுவிசில் 2038 குளிர்கால ஒலிம்பிக் – ஜனாதிபதி வயோலா விருப்பம்.

2038ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை சுவிற்சர்லாந்தில் நடத்துவதற்கு, ஜனாதிபதி வயோலா அம்ஹேட் விருப்பம் வெளியிட்டுள்ளார்.

பாரிசில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும், 128 சுவிஸ் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கும்,  அவர்  வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

லொஸ் ஏஞ்சல்ஸில் 1984 கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்னர், சுவிசில் இருந்து இம்முறை அதிகளவு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஒலிம்பிக் ஆரம்ப  விழாவில் பங்கேற் சுவிஸ் ஜனாதிபதி அம்ஹேட் ஞாயிற்றுக்கிழமை வரை பாரிஸில் தங்கியிருப்பார் என்றும்,  டென்னிஸ், நீச்சல் மற்றும் வாள்வீச்சு போட்டிகளைப் பார்வையிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – swissinfo

Related Articles

Latest Articles