33 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் பாரிசில் நேற்றிரவு கோலாகலமாக ஆரம்பமாகின.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த வண்ணமயமான தொடக்க விழாவில், நேற்றிரவு 11 மணிக்கு முன்னதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஒலிம்பிக் போட்டிகளை ஆரம்பித்து வைப்பதாக அறிவித்தார்.
- Advertisement -

ஒலிம்பிக் சுடரை கால்பந்தாட்ட வீரர் Zinédine Zidane மற்றும் டென்னிஸ் வீரர் Raphael Nadal ஆகியோர் இறுதியாக ஏந்தி வந்தனர்.
தடகள வீரர் Marie-José Pérec மற்றும் ஜூடோகா Teddy Riner ஆகியோர் பாரிஸ் ஒலிம்பிக் சுடரை ஏற்றினர்.
அப்போது, நெருப்புக் கிண்ணம் பொருத்தப்பட்ட சூடான காற்று பலூன், பாரிஸ் இரவு வானத்தில் ஒளிர்ந்தபடி வானில் பறக்கவிடப்பட்டது.


