1.6 C
New York
Saturday, February 14, 2026

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள் – இளைஞன் பலி.

Ticino கன்டோனில் உள்ள Vezia பிராந்தியத்தில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் 22 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.

சனிக்கிழமை இரவு 10.15 மணியளவில் 22 வயதுடைய சுவிஸ் இளைஞன் பயணம் செய்த மோட்டார் சைக்கிள், எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

காரை ஓட்டி வந்த 25 வயதுடைய பெண் காயங்களின்றி தப்பினார்.

மோட்டார் சைக்கிள் ஏன் தவறான பாதைக்குள் நுழைந்தது என்று பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles