-0.7 C
New York
Tuesday, December 30, 2025

முன்னாள் மனைவியையும் அவரது கணவனையும் சுட்டுக்கொன்ற நபர்.

Valais கன்டோனில்  Vétroz இல் நேற்று மூன்று பேர் உயிரிழந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Valais கன்டோன் பொலிஸ் கட்டளை அதிகாரி செய்தியாளர்களிடம் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதன்படி, 55 வயதான நபர்  ஒருவர், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த தனது முன்னாள் மனைவியையும், அவரது தற்போதைய கணவனையும் சுட்டுக் கொன்றுள்ளார்.

பின்னர் அவர் தனது வீட்டுக்குச் சென்று தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார்.

அவர்கள் திருமணமாகி 20 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தனர் என்றும் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர், துப்பாக்கியை வாங்குவதற்கு விண்ணப்பித்திருந்தார் என்றும் ஆனால் அவரது பெயரில் துப்பாக்கி உரிமம் இல்லை என்றும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles