11.4 C
New York
Tuesday, October 6, 2026

முடங்கியது சுவிஸ் பங்குச் சந்தை – முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.

சுவிட்சர்லாந்து பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் பல மணி நேரங்களாக முடங்கிப் போயிருந்தது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விலை தரவை  வழங்க முடியாத நிலையிலேயே, பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

கடந்த ஒரு ஒரு வருடத்தில், சுவிட்சர்லாந்து பங்குச் சந்தையில் இதுபோன்ற நிலை  ஏற்பட்டது இது இரண்டாவது  முறையாகும்.

சூரிச் நேரப்படி காலை 10 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் முடங்கியது. பங்கு வர்த்தகம் பிற்பகல் 2:30 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று SIX சுவிஸ் பரிவர்த்தனை தெரிவித்தது.

எனினும், நேற்றுக் காலை 9:10 மணி முதல் சந்தை தரவு மற்றும் குறியீடுகளைப் பெற முடியவில்லை என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.

SIX க்கு சொந்தமான ஸ்பானிஷ் பங்குச் சந்தைக்கான தரவுகளும் பல மணி நேரங்களுக்கு பாதிக்கப்பட்டன, இருப்பினும் அங்கு வர்த்தகம் தொடர்ந்து இடம்பெற்றது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles