சுவிட்சர்லாந்து பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் பல மணி நேரங்களாக முடங்கிப் போயிருந்தது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விலை தரவை வழங்க முடியாத நிலையிலேயே, பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஒரு வருடத்தில், சுவிட்சர்லாந்து பங்குச் சந்தையில் இதுபோன்ற நிலை ஏற்பட்டது இது இரண்டாவது முறையாகும்.
சூரிச் நேரப்படி காலை 10 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் முடங்கியது. பங்கு வர்த்தகம் பிற்பகல் 2:30 மணிக்கு மீண்டும் தொடங்கும் என்று SIX சுவிஸ் பரிவர்த்தனை தெரிவித்தது.
எனினும், நேற்றுக் காலை 9:10 மணி முதல் சந்தை தரவு மற்றும் குறியீடுகளைப் பெற முடியவில்லை என்று ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
SIX க்கு சொந்தமான ஸ்பானிஷ் பங்குச் சந்தைக்கான தரவுகளும் பல மணி நேரங்களுக்கு பாதிக்கப்பட்டன, இருப்பினும் அங்கு வர்த்தகம் தொடர்ந்து இடம்பெற்றது.
மூலம்- swissinfo

