பாரிஸ் Gare de Lyon மற்றும் Geneva, பாரிஸ் Gare de Lyon மற்றும் Lausanne இடையிலான அதிவேக நீண்டதூர ரயில் போக்குவரத்து மோசமான வானிலையால் தடைப்பட்டுள்ளது.
நேற்று இந்த ரயில்கள் ரத்துச் செய்யப்படுவதாக SBB அறிவித்துள்ளது.
இந்த ரயில் போக்குவரத்து நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெளிவாகத் தெரியாத நிலை நீடிக்கிறது.
அதேவேளை மத்திய கிழக்கு பிரான்சில் புயலினால் வீசப்பட்ட மரம் ஒன்று தாக்கி, TGV ரயில் ஒன்று சேதமடைந்துள்ள ஒளிப்படத்தை SNCF வெளியிட்டுள்ளது.
Saint-Florentin இல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தென்கிழக்கு நோக்கிய அதிவேக ரயில் போக்குவரத்து தடங்கலால் மொத்தம் 80,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக SNCF அறிவித்தது.
பாரிசுக்கும் Dijon க்கும் இடையே உள்ள ரயில் பாதைகளில் மரங்கள் வீழ்ந்துள்ளன. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
அதேவேளை ரயில் சேவை தடைப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையங்களில் காத்திருக்கின்றனர்.
மூலம்- 20min