பேர்ன் கன்டோனில் உள்ள Uetendorf இல் மின்னல் தாக்கி வீடு ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
இரண்டு குடும்பங்கள் வசிக்கும் வீட்டின் மீதே நேற்று மின்னல் தாக்கியது.
மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டின் மேல்தளம் முற்றிலும் எரிந்து நாசமாகியது.
தீப்பற்றிய தகவல் அறிந்ததும், 64 தீயணைப்பு படையினர் களத்தில் இறங்கி தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மின்னல் தாக்கிய போது அந்த வீட்டில், 3 பெரியவர்களும் 2 குழந்தைகளும் இருந்தனர் என்றும் ஆனாலும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம்- 20min