-0.7 C
New York
Sunday, December 28, 2025

கார் மீது மோதிய ரயில்.

Wängi இல் Frauenfeld-Wil ரயில் பாதையில், கார் ஒன்றுடன் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.

நேற்று மாலை 5 மணிக்குப் பின்னர்,  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் வாகன நிறுத்துமிடத்திலிருந்து வந்து கொண்டிருந்த கார் சாரதி, ஒரு ரயில்வே கடவுப்பாதையில் Frauenfelderstrasse க்கு திரும்ப முற்பட்ட போது, மாறி மாறி ஒளிரும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்த போதிலும், ரயில்வே கடவையை கடக்க முற்பட்டார்.

அப்போது, Münchwilen நோக்கிச் சென்று கொண்டிருந்த Frauenfeld-Wil ரயில் அவரது கார் மீது மோதியது.

இந்தச் சம்பவத்தில், 55 வயதான சாரதி சிறியளவில் காயமடைந்தார். அவசர சேவைகளால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles