Schaffhauserplatz இல் நேற்று மாலை ஒரு பாரிய பொலிஸ் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் சிறப்புப் பிரிவும் அந்த இடத்தில் காணப்பட்டுள்ளது.
இதனால் தேடுதல் நடவடிக்கை சிறிது நேரம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், இந்த நடவடிக்கையை உறுதி செய்த சூரிச் நகர பொலிஸ், தற்போது நிலைமை தெளிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
குற்றவியல் தொடர்புடைய எதுவும் இல்லை, எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை, யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள சூரிச் பொலிஸ், தற்போது நடவடிக்கை முடிவுக்கு வந்திருப்பதாகவும் கூறியுள்ளது.
மூலம் – Zueritoday

