11.5 C
New York
Tuesday, October 6, 2026

ஆனையிறவு விபத்தில் ஒருவர் பலி.

கிளிநொச்சி -ஆனையிறவு  இராணுவ சோதனை சாவடிக்கு அருகே, இன்று காலை  இரண்டு மோட்டார் சைக்கிள்கள்  ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

- Advertisement -

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles