சூரிச் தெரு அணிவகுப்பு எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
பெரிய நிகழ்வுகள் பெரும்பாலும் திட்டமிட்ட தாக்குதல்களுக்கு இலக்காகின்றன.
தெரு அணிவகுப்பில் ஏற்படும் ஆபத்து குறித்து ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொலிசார் அறிந்துள்ளனர். அதற்கேற்ப பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
வியன்னாவில் டெய்லர் ஸ்விப்ட் இசை நிகழ்வில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டமை, ஜூன் மாதம் சூரிச் பிரைடுக்கு எதிரான தாக்குதல் திட்டங்கள் காரணமாக, இன்று சூரிச் தெரு அணிவகுப்பின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்புகின்றன.
சூரிச்சில், நகர பொலிசார வரவிருக்கும் டெக்னோ பார்ட்டிக்கு விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுள்ளனர்.
சூரிச்சில் உள்ள தெரு அணிவகுப்பு அமைப்பாளர்கள் நடனக் கலைஞர்களின் பாதுகாப்பே தங்களின் மிக உயர்ந்த முன்னுரிமை என்று வலியுறுத்துகின்றனர்.
விரிவான பாதுகாப்பு, சாத்தியமான ஆபத்துகளைத் தடுக்கும் நோக்கம் கொண்டது. பாதுகாப்பு நடவடிக்கைகளின் விவரங்கள் தந்திரோபாய காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை.
எவ்வாறாயினும், அதிகாரிகள் உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் நிகழ்வை நிறுத்த முடியும் என்று தெரு அணிவகுப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சூரிச் நகர பொலிசார் தெரு அணிவகுப்பில் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மூலம்- Zueritoday

