6.8 C
New York
Monday, December 29, 2025

காரில் பற்றிய தீ வீட்டையும் நாசப்படுத்தியது.

Villnachernவில் உள்ள Dorfstrasse உள்ள ஒரு வீடு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த  கார்  இன்று அதிகாலை 3 மணியளவில் தீப்பிடித்து எரிந்தது.

காரில் பற்றிய தீ  மளமளவென  கட்டடத்தில் வேகமாக பரவியது.

ஏராளமான தீயணைப்பு படையினர்,  வந்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

விடியற்காலை வரை தீயை அணைக்கும் பணி இடம்பெற்றது.

வீட்டில் இருந்த 6 பேர் தூக்கத்தில் இருந்து எழும்பி ஓடியதால், காயமின்றித் தப்பினர்.

அந்தக் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. வீடும் பெருமளவில் சேதமடைந்தது.

ஆர்காவ் கன்டோனல் பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மூலம் -20min

Related Articles

Latest Articles