சுவிஸ் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான எயர் பஸ் ஏ330 விமானம் இன்று சூரிச் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது, பாரிய விபத்தில் இருந்து தப்பியது.
சூரிச்சிலிருந்து சிகாகோவிற்கு புறப்பட்ட LX06 விமானத்தின் விமானிகள், மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது, அதனை நிறுத்தினர்.
விமானத்துடன் பறவைமோதியதாக சந்தேகிக்கப்படுகிறது.
விமானம் பராமரிப்பு துறையால் ஆய்வு செய்யப்பட்டு, அதில் உள்ள 233 பயணிகளுக்கு மாற்று ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை 10 மணியளவில் நடந்த சம்பவத்தை அடுத்து, சூரிச் விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து முடங்கியது.
சுமார் 40 நிமிடங்களுக்குப் பின்னரே, மீண்டும் விமானப் பயணங்களை தொடங்க முடிந்தது என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்