Baar இல் நேற்று கார் மோதி ஆறு வயது சிறுவன் ஒருவன் பலத்த காயமடைந்தான்.
பெண் ஒருவர் காரை பின்நோக்கிச் செலுத்திய போதே, இந்த விபத்து நடந்துள்ளது.
சிறுவன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவன் மீது கார் மோதியுள்ளது.
விபத்துக்குப் பின்னர் சிறுவனின் கால் கார் சில்லுக்குள் அகப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த சிறுவனை கன்டோனுக்கு வெளியே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
மூலம் – bluewin