சூரிச்சின் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட பேக்கரி ஒன்று இந்த மாதத்துடன் மூடப்படுகிறது.
சூரிச்சின் மிகமும் மும்முரமான பகுதியான Albisriederplatz இல் முக்கியமான சந்திப்பில் அமைந்துள்ள Café Bauer என்ற பேக்கரியின் கதவுகள் இம்மாத இறுதியில் நிரந்தரமாக மூடப்படும்.
1922 ஆம் ஆண்டு முதல் இந்த பேக்கரி இயங்கி வருகிறது.
தினமும் தயாரிக்கப்படும் பாண் மற்றும் புதிதாக தயாரிக்கப்பட்ட கேக்குகளுக்காக இந்த பேக்கரி, நகர எல்லைக்கு அப்பாலும் நற்பெயரைப் பெற்றது.
பெரிய நிறுவனங்களின் வருகையினால் இதுபோன்ற சிறிய உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும், எதிர்காலம் இல்லாததால் அதனை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
மூலம் – zueritoday