டோக்கியோவில் இருந்து சூரிச் வந்து கொண்டிருந்த சுவிஸ் எயர் விமானம் நேற்று, கசகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதன்போது, போயிங் 777 விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசரமாக தரையிறங்கிய போது, டாக்ஸிவே மூடப்பட்டிருந்ததால், விமானி ஓடுபாதையில் விமானத்தை 180 டிகிரி திருப்ப வேண்டிருந்தது.
அப்போது, முன் சக்கரம் ஓடுபாதையில் இருந்து விலகி ஒரு புல்வெளியில் இறங்கியது. பின்னர் விமானம் மீண்டும் ஓடுபாதைக்கு கொண்டு வரப்பட்டது.
பயணிகளில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பயணி மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக விமான நிறுவன பேச்சாளர் தெரிவித்தார்.
ஏனைய பயணிகள் அனைவரும் நலமாக உள்ளனர் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தால், அஸ்தானா விமான நிலையம் இரண்டு மணி நேரம் மூடப்பட்டு, விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
மூலம் – zueritoday