18 C
New York
Friday, September 12, 2025

நீதிபதியாகத் தெரிவானார் அரச சட்டத்தரணி.

அரச சட்டத்தரணி சிமோன் லுஸ்டன்பெர்கர் (44) நீதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

GLP வேட்பாளரான அவர்,  மைய, LDP, FDP, EVP மற்றும் SVP ஆகியவற்றின் ஆதரவுடன் ஞாயிற்றுக்கிழமை நடந்த வாக்கெடுப்பில், Basel குற்றவியல் நீதிமன்றத்தின் மேலதிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதல் சுற்று வாக்கெடுப்பில் அவர் அறுதிப் பெரும்பான்மையை அடைந்தார்.

அனுபவம் வாய்ந்த அரசு சட்டத்தரணியான சிமோன் லுஸ்டன்பெர்கர் 14,310 வாக்குகளைப் பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டானியல் பாம்லின் 12,357 வாக்குகளைப் பெற்றார்.

இந்த வாக்கெடுப்பில், 26.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

லஸ்டன்பெர்கரின் இப்போது குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், சட்டமா அதிபர் அலுவலகத்தில் இரண்டு வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.

மூத்த அரச சட்டத்தரணியான அவரது கணவர் ஹான்ஸ் அம்மான், மனைவியை வெற்றி பெறச் செய்வதற்காக  ஜூன் மாத இறுதியில் தனது பதவியில் இருந்து விலகினார்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles