Matterhorn இல் மலை ஏறுபவர் ஒருவர், 800 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததில் உயிரிழந்தார்.
வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேரில் பார்த்த ஒருவர அளித்த தகவலை அடுத்து மீட்பு குழுவினர் விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டனர்.
கடல் மட்டத்தில் இருந்து 4200 மீற்றர் உயரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
மலையேறிக் கொண்டிருந்தவர் 800மீற்றர் ஆழமான பள்ளத்தில் விழுந்துள்ளார்.
இது குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
மூலம் – 20min