அஸ்தானாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சுவிஸ் விமானத்தில் இருந்த பயணிகள் மாற்று விமானம் சூலம் சூரிச் திரும்பியுள்ளனர்.
டோக்கியோவில் இருந்து சூரிச் வந்து கொண்டிருந்த சுவிஸ் எயர் விமானம் நேற்றுமுன்தினம், கசகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதன்போது, போயிங் 777 விமானத்தின் முன் சக்கரம் ஓடுபாதையில் இருந்து விலகி புல்வெளியில் இறங்கியது. பின்னர் விமானம் மீண்டும் ஓடுபாதைக்கு கொண்டு வரப்பட்டது.
பயணிகளில் ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த விமானத்தில் இருந்த 18 சிப்பந்திகள் உள்ளிட்ட 331 பேரும், நேற்றுக்காலை ஒஸ்ரிய விமானம் மூம் வியன்னா சென்று, அங்கிருந்து சூரிச் திரும்பியுள்ளனர்.
மூலம் – zueritoday