சுவிஸ் தொழிலாளர்கள் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களைச் சமாளிக்க உதவும் வகையில், இந்த ஆண்டு 4% ஊதிய உயர்வுக் கோரிக்கையை, தொழிற்சங்க கூட்டமைப்பான Travail Suisse விடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு ஊழியர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. குறைந்தளவிலான ஊதிய அதிகரிப்பு காரணமாக அவர்களின் வாங்கும் திறன் பாரியளவில் பலவீனமடைந்துள்ளது என்று Travail Suisse தெரிவித்துள்ளது.
பொருளாதார மீட்சி மற்றும் உற்பத்தித் திறன் அதிகரித்துள்ள போதிலும், உண்மையான ஊதியங்கள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாக வீழ்ச்சியடைந்து வருகின்றன என்று அது கூறியுள்ளது.
சம்பளம் இப்போது 2014 இல் இருந்த அதே மட்டத்தில் உள்ளது, என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம் – Swissinfo

