மத்திய கிழக்கில் தற்போது நிலவும் பதற்றநிலை காரணமாக இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் லெபனானின் பெய்ரூட் நகரங்களுக்கான விமான சேவை இடைநிறுத்தத்தை சுவிஸ் எயர்லைன்ஸ் நிறுவனம் ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை நீடித்துள்ளது.
அத்துடன், ஈரான், ஈராக் மற்றும் இஸ்ரேல் மீதான வான்வெளி ஓகஸ்ட் 26 ஆம் திகதி வரை பயன்படுத்தப்படாது என்றும், சுவிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம், ஆனால் எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமையாக உள்ளது” என்று சுவிஸ் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
மூலம் – Swissinfo

