ஓடும் ரயிலில் மேல் ஏறிய பதின்ம வயது சிறுவன் ஒருவர் உயர்வலு மின்சாரம் தாக்கி காயமடைந்தார்.
நேற்றுக்காலை 7 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
அவர் Rhaetian ரயில்வே RhB பயணிகள் ரயிலின் கூரையில் ஏறிய போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
11 ஆயிரம் வோல்ட் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட அந்த 14 வயதுடைய சிறுவன், சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த சிறுவன், செக் குடியரசில் இருந்து சுற்றுலா வந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.