ஜெனீவாவின் உயர்மட்ட அரசியல்வாதியான வின்சென்ட் மைத்ரே (43) மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை மீறி பயணம் செய்த போது, சிக்கியுள்ளார்.
அவர், 60 கிலோ மீற்றர் வேகத்தில் மட்டும் பயணம் செய்யக் கூடிய பகுதியில், மணிக்கு 97 கிலோ மீற்றர் வேகத்தில் சென்ற போதே பிடிபட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த 2023 நொவம்பர் மாதம் இடம்பெற்றுள்ளது.
நடமாடும் வேகப் பதிவு ராடர் கருவியில் அவரது இந்த மிகை வேகம் பதிவாகியுள்ளது.
எனினும் சுவிஸ் தேசிய கவுன்சிலின் உறுப்பினரும், துணை தலைவருமான வின்சென்ட் மைத்ரே வேக கட்டுப்பாட்டை மீறியதற்கான தண்டனை உத்தரவை ஏற்க மறுத்துள்ளார்.
மூலம் – 20min.