எச் 16 பைபாஸ் சாலையில் உள்ள, என்ஜி சுரங்கப்பாதையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் காயமடைந்தனர்.
நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் இந்த விபத்து நேரிட்டதாக St. Gallen கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
இரண்டு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒரு காரை ஓட்டி வந்த 57 வயதுடைய பெண் படுகாயம் அடைந்துள்ளார். மற்றைய காரின் சாரதியும் பயணியும் காயம் அடைந்தனர்.
அதையடுத்து மற்றொரு வானும் மோதிய போதும் அதன் சாரதி சிறியளவில் காயம் அடைந்தார்.
இந்த விபத்தினால் பல மணி நேரம் பாதையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது.
மூலம் – zueritoday