26.7 C
New York
Thursday, September 11, 2025

சுவிஸ் ஆயுதங்களை 3ஆம் தரப்புக்கு வழங்குகிறதா இந்தியா?

மூன்றாம் தரப்பினருக்கு போர்த் தளவாடங்களை மறு ஏற்றுமதி செய்யக் கூடாது என்ற  விதிமுறை,  தொடர்பாக இந்தியாவை கண்காணிப்பது கடினமாக இருப்பதாக  சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பரில் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட அனைத்து ஆயுதங்களையும் சுவிஸ் குழுவினால் ஆய்வு செய்ய முடியவில்லை.

ஆயுதங்களின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நேரடியாக சரிபார்க்க முடிந்தது, என்றும், நேரலை மூலமாகவே,  பல முறை சோதனை நடத்தப்பட்டதாகவும்,  எனவே இதன் முடிவு திருப்தியளிக்கவில்லை என்றும் சுவிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சரிபார்க்கப்படாத துப்பாக்கிகள் கடத்தப்பட்டிருக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதாக, பொருளாதார விவகாரங்களுக்கான அரச செயலகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து  ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள், அந்த  போர்த் தளவாடங்கள் மறுஏற்றுமதி செய்யப்படாது என்ற விதிமுறை பின்பற்றப்படுகிறதா என சரிபார்க்கும் உரிமையை கொண்டுள்ளது.

மூலம் –swissinfo

Related Articles

Latest Articles