சுவிட்சர்லாந்தில் முதியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2023 இல் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2.3% வீதம் அதிகரித்துள்ளது.
இந்த புள்ளிவிபரங்களின்படி, சுவிட்சர்லாந்தில் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 1.73 மில்லியன் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இருக்கின்றனர். இது ஒரு வருடத்திற்கு முன்பு 1.69 மில்லியனாக இருந்தது.
65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை அனைத்து கன்டோன்களிலும் உயர்ந்துள்ளது.
Obwalden, Fribourg, Schwyz, Thurgau மற்றும் Uri ஆகிய கன்டோன்களில் இந்த எண்ணிக்கை 3 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
2023 இல், சுவிட்சர்லாந்தில் 503,600 பேர் 80 வயதைக் கடந்துள்ளனர். 2022 இல் இந்த எண்ணிக்கை 485,600 (+3.7%) ஆக இருந்தது.
நூறு வயடை எட்டிய, முதியோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2022 இல் 1,948 பேராக இருந்த இந்த எண்ணிக்கை 2023 இல், 2,086 பேராக அதிகரித்துள்ளது.
மூலம் –swissinfo